தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’ஆடிப்பட்டம் தேடி விதை'- விதைகள் பகிர்வு திருவிழாவில் விவசாயிகள் பங்கேற்பு - seed festival in perambalur

இயற்கை விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக நடந்த விதைத் திருவிழாவில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

விதைகள் பகிர்வு திருவிழா
seed festival

By

Published : Jul 25, 2021, 3:38 PM IST

பெரம்பலூர்: விவசாயத்தை முதன்மையாக கொண்ட மாவட்டம் பெரம்பலூர். இங்கு உள்ள வெங்கடேசபுரம் பகுதியில் இயற்கை விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக விதை திருவிழா நடந்தது.

திருவிழாவில் பங்கேற்ற விவசாயிகள்

இதில் பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். பாரம்பரிய காய்கறி விதைகள், நாட்டு விதைகள், மரபு வகை அரிசி வகைகள், சிறு தானிய வகைகள் உள்ளிட்டவை இங்கு விற்பனை செய்யப்பட்டன.

நாட்டு விதைகள்

அது மட்டுமின்றி சிறுதானியத்தில் செய்யப்பட்ட ஆரோக்கியமான தின்பண்டங்கள், துணிப்பை வகைகளும் விற்கப்பட்டன. விழாவில் சுமார் 20க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆடிப்பட்ட பருவம் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் பாரம்பரிய விதைகளை வாங்க திருவிழாவில் குவிந்தனர்.

விதைகள் பகிர்வு திருவிழாவில் விவசாயிகள் பங்கேற்பு

இதையும் படிங்க:புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் விதை வெங்காய மூட்டைகள் தேக்கம்

ABOUT THE AUTHOR

...view details