பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலானது முதல்கட்டமாக பெரம்பலூர், வேப்பூர் ஒன்றியங்களிலும், இரண்டாவது கட்டமாக வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஒன்றியங்களிலும் நடைபெற்றது. இந்தத் தேர்தலானது எட்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 76 ஒன்றிய கவுன்சிலர், 121 ஊராட்சித் தலைவர், 1032 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற்றது.
இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு 31 வேட்பாளர்கள், ஒன்றிய கவுன்சிலருக்கு 292 வேட்பாளர்கள்,ஊராட்சி தலைவருக்கு 428 வேட்பாளர்கள், வார்டு உறுப்பினருக்கு 2370 வேட்பாளர்கள் என 3,121 பேர் போட்டியிட்டனர்.
இதனிடையே பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் பெரம்பலூர் ஒன்றியத்திற்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியி, வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உடும்பியம் ஈடன் காடன் மேல் நிலைப்பள்ளி, வேப்பூர் ஒன்றியத்திற்கு வேப்பூர் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் கல்லூரி, ஆலத்தூர் ஒன்றியத்திற்கு பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் எண்ணப்படுகின்றன.