தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்சியர் அலுவலகம் முன்பு  பெற்றோருடன் சத்துணவு அமைப்பாளர் தர்ணா - பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் சத்துணவு அமைப்பாளர் ஒருவர், வயதான பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

School Nutrition Organizer Dharna in Perambalur Collectorate, பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வயதான பெற்றோருடன் சத்துணவு அமைப்பாளர் தர்ணா
School Nutrition Organizer Dharna in Perambalur Collectorate

By

Published : Feb 1, 2022, 6:48 AM IST

பெரம்பலூர்:ஒதியம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றிவருபவர் அழகேஸ்வரி (40). இவருக்கும் அதே பள்ளியில் பணியாற்றும் சத்துணவு உதவியாளருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அழகேஸ்வரி டிச. 22ஆம் தேதி தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து சிகிச்சையில் உயிர் தப்பிய அழகேஸ்வரி பணி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு ஒரு மாத சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அத்துடன் வேறு பணியும் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்தும், சம்பளம், பணியிட மாற்றம் வேண்டியும் அழகேஸ்வரிநேற்று, வயதான பெற்றோருடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.

அத்துடன் தனக்கும், பெற்றோருக்கும் வாழ்வாதாரம் இல்லாததால் தங்களை கருணைக்கொலை செய்யுங்கள் என்றும் கோஷம் எழுப்பினார். இதையடுத்து காவல்துறை, மாவட்ட நிர்வாகம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதி சமாதானம் செய்தனர்.

இதையும் படிங்க: ஈஷாவில் அடிதடி: பார்வேர்டு பிளாக் தலைவரின் மகன் மீது தாக்குதல் - வெளியான வீடியோ

ABOUT THE AUTHOR

...view details