தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திறந்தவெளி மலக்கழிவு இல்லாத கிராமம்' - தகுதியில்லாத கிராமத்துக்கு சான்று! - unactive clean india project

பெரம்பலூர்: 'திறந்தவெளி மலக்கழிவு இல்லாத கிராமம்' என்ற சான்று அதற்குத் தகுதியில்லாத கொளப்பாடிக்கு வழங்கப்பட்டிருப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

திறந்த வெளி மலக்கழிவு இல்லாத கிராமம் என்ற பதாகையும் பூட்டி கிடக்கும் மகளிர் சுகாதார வளாகமும்

By

Published : Sep 18, 2019, 1:05 PM IST

பெரம்பலூர் மாவட்டம் கொளப்பாடி கிராமத்தில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் கடந்து ஐந்து ஆண்டுகளாக பயன்படுத்தப்படாததால் முட்புதர்களால் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இதனிடையே இந்தச் சுகாதார வளாகத்திற்கு 2018 -19ஆம் ஆண்டு பராமரிப்பு செலவிற்காக ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் நிதி செலவிடப்பட்டதாக சமூக செயற்பாட்டாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கொளப்பாடி கிராமத்தில் ஐந்து ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்

மேலும் இந்தக் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'திறந்தவெளி மலக்கழிவு இல்லாத கிராமம்' என்ற ஒரு அறிவிப்பு பலகையினையும் வைத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சமூக செயற்பாட்டாளர்கள் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கைவைக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details