பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முடிதிருத்துவோர் தொழிலாளர் நல சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
முடி திருத்துவோர் நல சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு - பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர்: கரோனோ நிவாரணம் மற்றும் பகுதிநேரம் கடை திறக்க அனுமதி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் முடிதிருத்துவோர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
பெரம்பலூர் முடி திருத்துவோர் நல சங்கத்தினர்
அதில், “கடந்த இரண்டு மாதமாக சலூன் கடை திறக்காமல் இருப்பதால் வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறோம், இதற்கு தமிழ்நாடு அரசு முடி திருத்துவோருக்கு கரோனோ நிவாரணமாக ரூபாய் பத்தாயிரம் வழங்க வேண்டும்.
மேலும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை குறிப்பிட்ட பகுதி நேரத்திற்கு மட்டுமாவது, கடை திறக்க அனுமதி வழங்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.