தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹோண்டா ஷோ ரூமில் ரூ7.5 லட்சம் திருட்டு - பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர்: பாலக்கரை அருகே ஹோண்டா ஷோ ரூமில் ரூபாய் 7.5 லட்சம் ரூபாய் திருடப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஹோண்டா ஷோரூமில் ரூ7.5  லட்சம் திருட்டு
ஹோண்டா ஷோரூமில் ரூ7.5 லட்சம் திருட்டு

By

Published : Dec 7, 2020, 7:38 PM IST

பெரம்பலூர் மாவட்டம் பாலக்கரை அருகே ஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை ஷோ ரூம் உள்ளது. வள்ளலார் என்ற பெயரில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் அரவிந்தன் நேற்று முன்தினம் ( டிசம்பர் 5 ) தனது அறையில் உள்ள டேபிள் லாக்கரில் ரூ7.5 லட்சம் பணத்தை வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து இன்று மதியம் அவர் லாக்கரை திறந்து பார்த்தபோது பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பெரம்பலூர் காால் துறையினரிடம் தகவல் தெரிவித்ததன் பேரில் அவரின் அறையில் கைரேகை நிபுணர்களை கொண்டு சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் திருட்டுப்போன எந்த ஒரு பதிவும் இல்லாதது காவல் துறையினருக்கு திருடர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details