பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தொண்டமாந்துறை-அரும்பாவூர் சாலையில் வசித்துவருபவர் செந்தில் குமார். இவர் வேலை காரணமாக வெளியூர் சென்று இன்று (ஆகஸ்ட் 7) வீடு திரும்பியபோது, வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் பணம் திருட்டு! - பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 லட்சம் ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
theft
மேலும் பீரோவில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அரும்பாவூர் காவல் துறையினருக்கு தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் தொடர்ச்சியாக அரங்கேறும் திருட்டுச் சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து : இருவர் உயிரிழப்பு