பெரம்பலூர் மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
உரிய ஆவணமில்லை: பெரம்பலூரில் 2.15 லட்சம் ரூபாய் பறிமுதல்!
பெரம்பலூர்: உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 2.15 லட்சம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல்செய்யப்பட்டது.
பெரம்பலூர் அருகே உரிய ஆவணங்களில்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ. 2.15 லட்சம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது அந்த வழியாக வாகனத்தில் வந்த குன்னம் கிராமத்தைச் சேர்ந்த சேட்டு என்பவரை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் உரிய ஆவணமின்றி இரண்டு லட்சத்து 15 ஆயிரத்து 910 ரூபாய் கொண்டுசெல்வது தெரியவந்தது. பறிமுதல்செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க:‘தலைவி’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தேம்பி தேம்பி அழுத கங்கனா!