பெரம்பலூர் அருகேயுள்ள வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் மார்கெட் சேகர் (எ) சேகர். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சேகர், பெரம்பலூரைச் சேர்ந்த கோபி என்பவரின் வீட்டில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை திருடியதாகத் கூறப்படுகிறது.
இந்நிலையில் கோபி, அவரது நண்பர் ரஃபீக், சேகர்ஆகியோர்பழைய பேருந்து நிலையம் அருகே அங்காளம்மன் கோயிலில் மது அருந்தியுள்ளனர். அப்போது, திருடிய பணத்தை திரும்பக் கேட்டதில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த ரஃபீக் கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.