பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள கூத்தனூர் கிராமத்தில் அரசு ஏலம் விடப்படாத வெள்ளி மலை கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல் குவாரியிலிருந்து தனியார் கிரஷர் கம்பெனிகளைச் சேர்ந்தோர் திருட்டுத்தனமாக கற்களை வெட்டி எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது.
இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிய ரவுடி கும்பல்! - கிரஷர்
பெரம்பலூர்: கனிமவளக் கொள்ளையை தட்டிக்கேட்ட கிராம மக்களில் ஒரு இளைஞரை ரவுடிகள் ஓட ஓட விரட்டி அரிவளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிய ரவுடி கும்பல்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3455043-492-3455043-1559536182219.jpg)
File pic
அரிவளால் வெட்டு வாங்கிய இளைஞர்
இதை கூத்தனூர் கிராம பொதுமக்கள் தட்டிக் கேட்டுள்ளனர். இதில் கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரை ரவுடிகள் ஓட, ஓட விரட்டி அரிவாளலால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதில் பாக்கியராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உயிருக்கு ஆபத்தனான நிலையில் அவரை மக்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.