பெரம்பலூர் நான்கு ரோடு மின்சார வாரியம் அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள ரெங்கம்மாள் நகரில் வசித்து வருபவர் ஒய்வு பெற்ற வேளாண் அலுவலர் வாசுதேவன். இவர் நேற்று (மே 6) இரவு தனது வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.
அந்நேரம் வீட்டின் கீழ் பகுதியில் யாரும் இல்லாததால் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து வீட்டின் பீரோவில் வைத்திருந்த நெக்லஸ், செயின், மோதிரம், வளையல் உள்ளிட்ட 21 பவுன் தங்க நகைகள், நான்கு செல்ஃபோன்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர்.