கரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் வேலைக்கு செல்ல முடியாத காரணத்தால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இதனிடையே பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் 25 கி அடங்கிய அரிசி சிப்பத்தை ஊராட்சி மன்ற தலைவர் சித்ராதேவி குமார் வழங்கினார்.
