தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்த வருகிறது. இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நேற்று (மே.23) பெரம்பலூர் வருவாய் கோட்ட சார் ஆட்சியர் பத்மஜா உள்ளிட்ட 475 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பெரம்பலூரில் சார் ஆட்சியர் உள்ளிட்ட 475 பேருக்கு கரோனா தொற்று! - Revenue Divisional officer corona positive in perambalur
பெரம்பலூர்: நேற்று (மே. 23) வருவாய் கோட்ட சார் ஆட்சியர் உள்ளிட்ட 475 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரில் அதிகரிக்கும் கரோனா தொற்று
மேலும், பெரம்பலூர் வட்டத்தில் மட்டும் 233 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று (மே.23) ஒரே நாளில் கரோனா தொற்றுக்கு இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க:பொதுமக்களிடம் முகக்கவசம் அணிய வலியுறுத்தல் - காலில் விழுந்த மணல்மேடு பேரூராட்சி ஊழியர்