தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெல் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற ஊழியர் தற்கொலை முயற்சி - பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

பெரம்பலூர்: பெல் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற ஊழியர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் தற்கொலை முயற்சி
ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் தற்கொலை முயற்சி

By

Published : Mar 1, 2021, 3:15 PM IST

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் ராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன். பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.

அவர்கள் சாமிநாதனுக்குச் சொந்தமான நிலத்தின் பாகத்தைப் பிரித்துக் கொடுக்க மறுப்பதாலும், தன்னுடைய மகனுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாலும் மன உளைச்சலில் இருந்துள்ளனர்.

ஓய்வுபெற்ற பெல் நிறுவன ஊழியர் தற்கொலை முயற்சி

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சாமிநாதன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதனைக்கண்டு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

இதையும் படிங்க:இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details