தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிணற்றில் விழுந்த பசு மாட்டை மீட்ட தீயணைப்புத் துறையினர்! - 65 ஆடி ஆழ கிணற்றில் விழுந்த பசு மாடு

பெரம்பலூர்: வரகுபாடி கிராமத்தில் 65 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசு மாடு தீயணைப்பு துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

cow
cow

By

Published : Jan 15, 2020, 11:07 PM IST

பெரம்பலூர் மாவட்டம் வரகுபாடி கிராமத்தில் உள்ள வீரமணி என்பவரது பசு மாடு இன்று மாலை அவரது தோட்டத்தை ஒட்டிய 20 -20 நீளம் கொண்ட 65 அடி ஆழ கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது. கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருக்கு போராடியது. இதனைக் கண்டறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பசு மாட்டை மீட்கும் தீயணைப்புத் துறை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு 65 அடி ஆழ கிணற்றில் தத்தளித்த பசு மாட்டினை வரகுபாடி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் பத்திரமாக மீட்டனர்.

பெண்கள் மட்டும் கலந்துகொள்ளும் நவீன ஜல்லிக்கட்டு!

மேலும், நாளை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில் பசு மாடு பத்திரமாக மீட்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details