பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தோழர் ஜீவா அம்பேத்கர் நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கம் சார்பில், நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் தாரை, தப்பட்டை முழங்க பல்வேறு வேடமிட்டு மனு அளித்தனர்.
அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.10,000 நிவாரணத் தொகை வழங்கக் கோரி மனு! - Relief for Folk Artists
பெரம்பலூர்: நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு தோழர் ஜீவா அம்பேத்கர் நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகள் வைத்து மனு அளித்தனர்.
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
கோரிக்கைகள்
- நாட்டுப்புறக் கலைஞர்கள் பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாத அனைத்து மூத்தக் கலைஞர்களுக்கும் கரோனா நிவாரணத் தொகையாக ரூபாய் பத்தாயிரம் வழங்கிட வேண்டும்.
- நாட்டுப்புறக் கலைஞர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
- கரோனா விழிப்புணர்வு நிகழ்விற்கு நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மனு அளிக்கும் கோரிக்கைகளை விளக்கியும் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.