பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் மழைக்காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொது மக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் பேரிடர் மேலாண்மை மற்றும் அவசரகால மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி ஆட்சியர் சாந்தா முன்னிலையில் நடைபெற்றது.
மழை காலத்தில் மீட்பு நடவடிக்கை குறித்து தீயணைப்புத் துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி - தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி
பெரம்பலூர்: வடகிழக்கு பருவமழை காலத்தில் மீட்பு நடவடிக்கை குறித்து தீயணைப்புத் துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது.

தீயணைப்புத் துறையினர் மூலம் ஏரி, குளம் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ரப்பர் படகு மீட்பு பணியின் போது 100 மீட்டர் சுற்றளவிற்கு வெளிச்சம் தரவல்ல உயர் கோபுர விளக்கு, உயிர்காக்கும் மிதவை, உயிர் காக்கும் இரும்பு பொருள்களை எட்டக்கூடிய ஹைட்ராலிக் மூளையில் இயங்கும் கருவி உள்ளிட்ட பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு அவற்றின் இயக்கம் குறித்து செயல்விளக்கம் காட்டப்பட்டது.
மேலும் தீயணைப்புத் துறையினர் விபத்து, வெள்ள நேரங்களில் பொது மக்களை காப்பாற்ற தீயணைப்பு மற்றும் பாதுகாப்புத் துறையினர் மூலம் விபத்தில் நடக்க இயலாத நிலையில் உள்ளவரை பாதுகாப்பான இடத்திற்கு பல்வேறு முறைகளைப் பின்பற்றி அழைத்துச் செல்வது குறித்து செயல்விளக்கம் காட்டப்பட்டது.