இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 2020ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான கலந்தாய்வு சேர்க்கைக்கான பதிவு ஆன்லைன் மூலம் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் 16/8/2020 முதல் பெரம்பலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம், ஆலத்தூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தனியார் கணினி மையம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஆன்லைன் மூலம் பதிவு - பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
பெரம்பலூர்: அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஆன்லைன் மூலம் பதிவு
மேலும் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் தொடர்பான விவரங்களுக்கு பெரம்பலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தை 9442478574என்ற அலைபேசி எண்ணிலும் ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 9499055884என்ற அலைபேசி எண்ணிலும் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 04328_225352என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்" என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.