பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சாத்த நத்தம் கிராமத்தில் கரோனா வைரஸ் நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த கந்தசாமி என்ற மாற்றுத்திறனாளி இரண்டு கால்களும் செயலிழந்து ஆதரவற்ற நிலையில் இருந்ததை கண்ட வருவாய்த்துறையினர், பெரம்பலூர் கிங்ஸ் ரோட்டரி சங்கம் மூலம் மூன்று சக்கர மிதிவண்டி வழங்க ஏற்பாடு செய்து கந்தசாமிக்கு அனுப்பி வைத்தனர்.
மாற்றுத்திறனாளிக்கு வீடு தேடி சென்று உதவிய கோட்டாட்சியர் - பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
பெரம்பலூர்: மாற்றுத்திறனாளி நபருக்கு வீடு தேடி சென்று மூன்று சக்கர மிதிவண்டியை கோட்டாட்சியர் வழங்கினார்.
![மாற்றுத்திறனாளிக்கு வீடு தேடி சென்று உதவிய கோட்டாட்சியர் மாற்றுத்திறனாளிக்கு வீடு தேடி சென்று உதவிய கோட்டாட்சியர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:37:09:1598688429-tn-pbl-02-handicaped-help-rdo-script-image-7205953-29082020130449-2908f-00855-713.jpg)
மாற்றுத்திறனாளிக்கு வீடு தேடி சென்று உதவிய கோட்டாட்சியர்
பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், கந்தசாமியின் வீட்டிற்கு சென்று மூன்று சக்கர மிதிவண்டியை வழங்கினார். மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் ஆய்வு மேற்கொண்டு உதவித்தொகை பெறமுடியாத முதியோர், கைம்பெண் ஆகியோருக்கு விரைந்து உதவித்தொகை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.