தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவே ரணில் விக்கிரமசிங்கே பதவிக்கு வந்திருக்கிறார் - இலங்கை எம்.பி.! - நுவரேலியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன்

ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ரணில் விக்கிரமசிங்கே, பிரதமர் பதவியை ஏற்றிருக்கிறார் என்பது தெரியவருகிறது என இலங்கை மலையக மக்கள் முன்னணி கட்சியின் தலைவரும் நுவரேலியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சே குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவே ரணில் விக்கிரமசிங் பதவிக்கு வந்திருக்கிறார்  - இலங்கை எம்பி ராதாகிருஷ்ணன் !
ராஜபக்சே குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவே ரணில் விக்கிரமசிங் பதவிக்கு வந்திருக்கிறார் - இலங்கை எம்பி ராதாகிருஷ்ணன் !

By

Published : May 22, 2022, 4:59 PM IST

Updated : May 22, 2022, 5:42 PM IST

பெரம்பலூர் துறைமங்கலம் நியூகாலனியில் உள்ள கௌசல்யா தியாகராஜன் என்பவரின் வீட்டிற்கு வந்த இலங்கை மலையக மக்கள் முன்னணி கட்சியின் தலைவரும் நுவரேலியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசும்போது, "இலங்கையில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவியை ஏற்றிருக்கிறார். அவர் இதுவரை ஆறு தடவை பிரதம மந்திரியாகப் பதவி ஏற்று இருக்கிறார். அவர் நாட்டிற்கு நல்லது செய்வார் என்ற அடிப்படையை நாங்கள் நம்பவில்லை.

ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ரணில் விக்கிரமசிங்கே அவர்கள் இந்தப் பதவியை ஏற்றதாகத் தான் தெரியவருகிறது. ராஜபக்சே ரணில் விக்கிரமசிங்கேவினை விலைக்கு வாங்கிவிட்டார்.

பிரதமர் மோடி அவர்களையும் அவர்களது அரசாங்கத்தையும் இந்த நேரத்தில் நாங்கள் பாராட்டுகின்றோம். அதே நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மேலும் தமிழ்நாட்டின் முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாட்டு மக்களும் உதவிகளை செய்து வருகின்றனர். ஆகையால், அவர்களையும் இந்நேரத்தில் பாராட்டுகின்றோம்.

மேலும் பேரறிவாளன் விடுதலையினை வரவேற்பதாகவும் தமிழ்நாட்டில் உள்ள அதிமுக, திமுக இரண்டு அரசியல் கட்சிகளாலும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இதற்கு தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவே ரணில் விக்கிரமசிங்கே பதவிக்கு வந்திருக்கிறார் - இலங்கை எம்.பி.!

இதையும் படிங்க :நாட்டை விட்டு வெளியேறக் கூடாது - மகிந்த ராஜபக்சவுக்கு அதிரடி உத்தரவிட்ட இலங்கை நீதிமன்றம்

Last Updated : May 22, 2022, 5:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details