தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் நோன்பு தொடங்கபடவுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு நோன்பு கட்சிக்காக மானிய விலையில் பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் அரிசி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளிவாசல்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நோன்பு கஞ்சிக்கு அரிசி வழங்குவதில் அலட்சியம்!
பெரம்பலூர்: ரம்ஜான் பண்டிகை நோன்பு கஞ்சிக்கான அரசியை வழங்காததால் மாவட்ட வழங்கல் அலுவலகத்தை பள்ளிவாசல் நிர்வாகிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள், நோன்பு தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே மானிய விலையில் அரிசி வழங்கும் நடவடிக்கையை அரசு தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த வருடம் தமிழக அரசு அரிசி வழங்குவது குறித்துஉத்தரவிடவில்லை என அதிகாரிகள் கூறி, காலதாமதம் செய்து வருகின்றனர், என்றார். மாவட்ட நிர்வாகத்தின் இந்த அலட்சிய போக்கிற்கு கண்டனம் தெரிவித்த நிர்வாகிகள், மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.