இன்று உலக கால்நடை மருத்துவர்கள் தினம். இதனையொட்டி கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் இலவச வெறிநாய்கடி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
வெறிநாய் கடி நோய்கான இலவச தடுப்பூசி முகாம் - Doctors day
பெரம்பலூர்: உலக கால்நடை மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு வெறிநாய் கடி நோய்கான இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டன. இதில், 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு இலவச தடுப்பூசிகள் போடப்பட்டன.
![வெறிநாய் கடி நோய்கான இலவச தடுப்பூசி முகாம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3120639-thumbnail-3x2-rabbies.jpg)
வெறிநாய் கடி தடுப்பூசி
வெறிநாய் கடி நோய் தடுப்பூசி முகாம்
இதில் கால்நடை உதவி மருத்துவர் செந்தில்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட மருத்துவர்கள் நாய்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டு, பரிசோதனை செய்தனர். இந்த முகாமிற்கு கால்நடை மருத்துவ மற்றும் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மதனகோபால் தலைமை வகித்தார்.