பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் குழந்தை நல அலுவலர்களுக்கு குழந்தைகளின் நலச்சட்டம், குழந்தை திருமணத்தை முன்கூட்டியே தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கலந்துகொண்டார். அப்போது பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் முனைவர் ஆனி விஜயா உருவாக்கிய 'SHIELD' (கேடயம்) திட்டம் அதற்கான தொடர்பு எண்களான 6383071800, 9384501999 ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைத்தும் குழந்தைகளுக்கு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார்.
பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு புத்தகம் வெளியீடு - பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு புத்தகம்
பெரம்பலூர்: பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு புத்தகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டார்.
![பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு புத்தகம் வெளியீடு புத்தக வெளியீடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:51:59:1601565719-tn-pbl-07-police-sp-schiled-scheme-script-image-7205953-01102020193413-0110f-03071-38.jpg)
புத்தக வெளியீடு
தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நீதி ராஜ் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு எவ்வாறு பிரச்னைகள் ஏற்படுகின்றது எனவும் குழந்தைகளிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் காவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.