பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பேரளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் நேற்றிரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதே ஊரைச் சேர்ந்த ஒரு பிரிவினர் அவரைத் தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஜெயக்குமார் மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நேற்றிரவு ஜெயக்குமாரைத் தாக்கியதாகக்கூறி பத்திற்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் அழைத்து சென்றனர்.
இந்த விவகாரத்தில் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல் காவல் துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டுள்ளதாகக்கூறி மக்கள் குற்றம் சாட்டினர். அதுமட்டுமின்றி, காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் தரப்பினர் 300-க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.