தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் துறையை கண்டித்து மக்கள் சாலை மறியல் - traffic police latest news

பெரம்பலூர்: போக்குவரத்து சிக்னலைத் தாண்டிவந்ததாக 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை போக்குவரத்து காவல் துறையினர் பிடித்து வைத்தததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

perambalur

By

Published : Oct 7, 2019, 1:57 PM IST

பெரம்பலூர் நகர்ப்புற பகுதிக்குள்பட்ட காமராஜர் வளைவு பகுதியில் போக்குவரத்துக் காவல் துறையினர் சமிக்ஞையை (சிக்னல்) தாண்டி வந்ததாகக் கூறி 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களைப் பிடித்து வைத்தனர்.

பல்வேறு பணிகள் காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்ற பொதுமக்கள் போக்குவரத்துக் காவலர்கள் எல்லைமீறி செல்வதாகக் குற்றஞ்சாட்டி பொதுமக்கள் அவர்களது இருசக்கர வாகனத்தை சாலையில் போட்டுவிட்டு போக்குவரத்து காவலர்களிடம் அரைமணி நேரத்திற்கும் மேலாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்துக் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

போக்குவரத்துக் காவலர்கள் தினமும் அப்பகுதியில் வேண்டுமென்றே இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். பின்னர் காவல்துறை உயர் அலுவலர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பொதுமக்கள் மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: போக்குவரத்து காவலர்களுக்கு பதிலாக களத்தில் இறங்கிய திமுக எம்.பி

ABOUT THE AUTHOR

...view details