தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்! - பெரம்பலூர் ட்ரோன் மூலம் இயக்கரருது

பெரம்பலூர்: கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மாவட்ட நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்!
ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

By

Published : Jun 3, 2021, 4:03 PM IST

பெரம்பலூர் நகர் பகுதியில் கரோனோ பரவலை கட்டுப்படுத்த, நகராட்சியின் சார்பில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் கிருமிநாசினி தெளிக்கும் பணியை துவக்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் குமரி மன்னன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

முதல் கட்டமாக பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, காமராஜர் வளைவு பகுதி ஆகிய இடங்களில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இப்பணியில் நகராட்சி, சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details