பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா ஊரடங்கை பயன்படுத்தி, தனியார் பைனான்ஸ் நிறுவனம் வாடிக்கையாளரின் தவணைத் தொகையை வசூலித்ததாக 50க்கும் மேற்ப்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் மீது பொதுமக்கள் புகார்! - காவல்துறை விசாரணை
பெரம்பலூர்: கரோனா ஊரடங்கை பயன்படுத்தி தனியார் பைனான்ஸ் நிறுவனம் மோசடி செய்வதாக கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
இதுகுறித்து அந்த மனுவில், தனியார் கடன் தொகையை வசூலிக்க அரசு கால அவகாசம் நீட்டிப்பு செய்துள்ளது. இந்நிலையில் பெரம்பலூரில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனம், கரோனா ஊரடங்கை பயன்படுத்தி கடன் தொகையை இரட்டிப்பாக்கி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதால் அந்த நிறுவனத்தின் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதைத்தொடர்ந்து தனியார் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மீது மோசடி புகார் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.