தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாசன வசதிக்காக வாய்க்காலை சீரமைக்கும் கிராம மக்கள்! - visvakudi dam

பெரம்பலூர்: வேப்பந்தட்டையில் விசுவக்குடி அணையில் 5 கி.மீ தூர வரத்து வாய்க்கால்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அன்னமங்கலம் கிராம மக்கள் சீரமைத்து வருகின்றனர்.

jcp
jcp

By

Published : Feb 13, 2021, 12:56 PM IST

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் விசுவக்குடி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து அன்னமங்கலம் கிராமத்திற்கு நீர் வருவதற்கான வரத்து வாய்க்கால்கள் தூர் வாரப்படாமல் இருந்தது.

இதனால் பாசன வசதிக்கு தண்ணீர் இல்லாத சூழ்நிலை அன்னமங்கலம் கிராமத்திற்கு நிலவி வந்தது. இந்நிலையில் அரசின் உதவியை எதிர்பார்க்காமல் அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து சுமார் 5 கி.மீ தூரமுள்ள வரத்து வாய்க்கால்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைத்து வருகின்றனர்.

5 கி.மீ தூர வரத்து வாய்க்கால்களை தூர் வாரிய அன்னமங்கலம் கிராம மக்கள்

இதன் மூலம் விசுவக்குடி நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வருவதற்கு கிராம மக்கள் எடுத்த முயற்சி சிறப்புக்குரியதாகும் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

பாசன வசதிக்காக வரத்து வாய்க்காலை சீரமைக்கும் கிராம மக்கள்

தங்கள் கிராமத்தில் விவசாய பாசன வசதி பெறுவதற்கு நல்வாய்ப்பாக அமையும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 3 பேரை கொன்ற சங்கர் யானை பிடிபட்டது

ABOUT THE AUTHOR

...view details