தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
'குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டம்' - சாலை பணியாளர்கள் அறிவிப்பு!
பெரம்பலூர்: சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 28-ஆம் தேதி அன்று, சென்னை நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்குனர் அலுவலகத்தில் குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று சாலைப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இக்கூட்டத்தில், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி பணப்பலன்களை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு வேலை நிதியில் ஊதியம் வழங்குவதை கைவிட்டு, அரசின் பொதுநிதியில் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மே 28ஆம் தேதி சென்னையில் உள்ள தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்குனர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தைச் சார்ந்த பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.