பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம், பெரம்பலூர் பணிமனை முன்பு ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் குடும்பத்துடன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
பெரம்பலூர்: நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் சங்கத்தின் தலைவர் வேதமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 2015 நவம்பர் முதல் 2020 ஆகஸ்ட் வரை 58 மாத உயர்வு, நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், 2019 ஏப்ரல் முதல் 2020 ஏப்ரல் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வுகால பண பலன்களை வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.