பெரம்பலூர் மாவட்ட சுகாதாரப் பணிகளின் இணை இயக்குநராக இருப்பவர் திருமால். இவரிடம் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில், கிருத்திகா என்ற மருத்துவருக்குப் பணிமாறுதல் தொடர்பாக தொலைபேசியில் நேற்று (நவ. 2) பேசியுள்ளார்.
சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மிரட்டல்: அரசு மருத்துவ சங்கத் தலைவருக்கு எதிராகப் போராட்டம் - தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர்
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநரை தொலைபேசியில் மிரட்டிய மருத்துவர் செந்தில் என்பவரைக் கண்டித்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மிரட்டல்: அரசு மருத்துவ சங்கத் தலைவருக்கு எதிராகப் போராட்டம் docotrs and workers protest in perambalur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:51:57:1604312517-tn-pbl-03-govt-docters-staffs-protest-script-vis-7205953-02112020135340-0211f-01155-863.jpg)
அப்போது இணை இயக்குநர் திருமாலை தொலைத்துவிடுவேன் என்று செந்தில் மிரட்டி பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகியது.
இதைத்தொடர்ந்து இணை இயக்குநரை மிரட்டிய மருத்துவர் செந்திலைக் கண்டித்து பெரம்பலூர் அரசு மருத்துவமனை வளாகம் முன்பு அரசு மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஆர்ப்பாட்டத்தின்போது செந்தில் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.