தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் பதவிக்கு சிக்கல்? - Dmk Panchayat Councillor joined in ADMK

பெரம்பலூர்: ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த டி.களத்தூர் திமுக கவுன்சிலர் அதிமுகவில் இணைந்ததால் திமுக ஒன்றியப் பெருந்தலைவர் பதவிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

திமுக ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் பதவிக்கு சிக்கல்?
திமுக ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் பதவிக்கு சிக்கல்?

By

Published : Nov 2, 2020, 4:13 PM IST

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் 18 கவுன்சிலர்களை உள்ளடக்கியது. ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியப் பெருந்தலைவராக திமுகவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் உள்ளார்.

நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஒன்பது கவுன்சிலர்களும் அதிமுகவிற்கு 9 கவுன்சிலர்களும் சமமாக இருந்தனர். இதனால் குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்று, அந்தத் தேர்வில் திமுகவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஒன்றியப் பெருந்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் துணை ஒன்றியத்தின் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சுசீலா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட டி.களத்தூர் திமுக கவுன்சிலராக இருந்த லதா நேற்று இரவு (நவ.01) பெரம்பலூர் மாவட்ட அதிமுகச் செயலாளரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதனிடையே திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் சரி சமமாக இருந்து வந்த நிலையில், தற்பொழுது அதிமுகவிற்கு கூடுதல் எண்ணிக்கையில் ஒரு கவுன்சிலர் இருப்பதால், திமுகவைச் சேர்ந்த ஒன்றியப் பெருந்தலைவர் பதவிக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடைபெற்று, இந்த வாக்கெடுப்பில் திமுக ஒன்றியப் பெருந்தலைவர் தோல்வியடைந்தால், அவர் பதவி இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கட்சி தொடங்கும் முன்னரே ரஜினிக்கு வாக்கு சேகரிக்கும் மகளிர் சுய உதவிக் குழுவினர்!

ABOUT THE AUTHOR

...view details