பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் பள்ளி உரிமையாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டத்தின் போது, கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் ஊழியர்கள் வாழ்வாதாரத்திற்காக மாதம் பத்தாயிரம் நிவாரண தொகை வழங்க வேண்டும், தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை 2018 - 19 ஆம் ஆண்டிற்கு 40 விழுக்காடும், 2019-20 ஆம் ஆண்டிற்கு100 விழுக்காடும் உடனே வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேலும், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் மூன்றாண்டுகள் அங்கீகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் பள்ளி ஆசிரியர்கள், உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு - மண்ணெண்ணெய் கேனுடன் பொதுமக்கள் போராட்டம்!