தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று, வேகமாகப் பரவி வரும் நிலையில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூரிலும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனிடையே பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாளிதழ்களில் பணியாற்றுபவர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்களுக்குக் கரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. இதனை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா பார்வையிட்டார்.