பெரம்பலூர்: குன்னம் வட்டம் பென்னக்கோணம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஜெயலெஷ்மி இளங்கோவன். இவர் துணை தலைவராக உள்ள செல்வராணியைக் கண்டித்து, வார்டு உறுப்பினர், தூய்மை பணியாளர்களுடன் சேந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தார்.
மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது,
“துணை தலைவராக உள்ள செல்வராணி செல்வகுமார் ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்காததால் நிர்வாக பணி செய்ய முடியவில்லை. மேலும் துணை தலைவர் ஊராட்சி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க கூடிய காசோலை உள்ளிட்டவற்றில் கையொப்பம் இட மறுப்பதால், மூன்று மாத காலமாக தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் இயக்குபவர்களுக்கு ஊதியம் வழங்க வில்லை.