தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்பேத்கர் சிலைக்கு பிரேமலதா மரியாதை - ambedkar

பெரம்பலூர்: டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலுள்ள அவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

அம்பேத்கர் சிலைக்கு பிரேமலதா மறியாதை

By

Published : Apr 14, 2019, 7:04 PM IST

நாடு முழுவதும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

அம்பேத்கர் சிலைக்கு பிரேமலதா மறியாதை

இந்நிகழ்வில், பெரம்பலூர் மக்களவை அதிமுக வேட்பாளர் சிவபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், சிதம்பரம் மக்களவை உறுப்பினர் சந்திரகாசி, தேமுதிக மாவட்ட செயலாளர் துரை காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதிஷை ஆதரித்து பிரேமலதா பரப்புரையில் ஈடுப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details