தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூச்சுத் திணறி நிறைமாத கர்ப்பிணி உயிரிழப்பு - tamil latest news

பெரம்பலூர்: அரசு தலைமை மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணி, மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

கர்ப்பிணி உயிரிழப்பு
கர்ப்பிணி உயிரிழப்பு

By

Published : May 21, 2020, 6:49 PM IST

கரோனா வைரஸ் நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த தொற்று பாதிப்பால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மேலும் கர்ப்பிணி பெண்கள் என அனைவரையும் பாதிப்படைந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் உடும்பியம் கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி இன்று மூச்சுத்திணறல் ஏற்பட்ட காரணத்தினால் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மூச்சுத் திணறல் அதிகமாகி நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்துள்ளார்.

இதனிடையே உயிரிழந்துள்ள நிறைமாத கர்ப்பிணிக்கு கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று மருத்துவமனை நிர்வாகம் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளது. கூடிய விரைவில் பரிசோதனையின் முடிவுகள் தெரியவரும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பயனற்றுக் கிடந்த கிணற்றை உயிர்பெறச் செய்த இளைஞர்கள்

ABOUT THE AUTHOR

...view details