தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் கைது: பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் கைதைக் கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் டெல்லி மாநில நிர்வாகிகளை கைது செய்த மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

Popular Front of India protest in Perambalur
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் கைதைக் கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்!

By

Published : Mar 13, 2020, 11:46 PM IST

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்திவருகின்றன. இதனிடையே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாஹீன் பாக்கில் நடைபெற்ற போராட்டத்தை அடுத்து வன்முறை வெடித்து. இது தொடர்பான வழக்கில் பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

டெல்லி வடகிழக்கில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையில் வழக்கு பதிந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் டெல்லி மாநில நிர்வாகிகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் டெல்லி காவல் துறை கைது செய்துள்ளது. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் கைதைக் கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்!

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை முன்பு மாவட்ட செயலாளர் முகமது அலி தலைமையில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் டெல்லி மாநில நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க :மாவோயிஸ்ட் ஊடுருவலைத் தடுக்க தீவிர சோதனை - நீலகிரி எஸ்.பி.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details