பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஐந்து வயதிற்கு உள்பட்ட குழந்தைகளுக்கு இன்று(ஜன.31) போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியினை பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கிவைத்தனர்.
அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் ஜன 31ஆம் தேதியான இன்று 387 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என ஆக மொத்தம் 387 மையங்களில் போலியோ சொட்டு வழங்கப்படுகிறது.
இம்முகாம்களில் சுமார் 46,000 க்கும் மேற்பட்ட ஐந்து வயதிற்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், தன்னார்வலர்கள் என ஆக மொத்தம் 1,548 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதலமைச்சர் தொடங்கிவைத்தார்!