தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாராயம் காய்ச்சினால் குண்டர் சட்டம் பாயும்- பெரம்பலூர் காவல் துறை எச்சரிக்கை!

சாராயம் காய்ச்சினால் குண்டர் சட்டம் பாயும் என பெரம்பலூர் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கள்ளச்சாராயம் காய்ச்சினால் சிறை
பெரம்பலூர் செய்திகள்

By

Published : Jun 1, 2021, 1:41 PM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.

இதனிடையே பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக சாராயம் காய்சசுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், "பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம், ஊறல், எரிச்சாராயம் ஆகியவற்றை தயார் செய்தல், விற்பனை செய்தல், மதுபாட்டில்கள் பத்துக்கிவைத்து விற்பனை செய்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் கள்ளச் சாரயாயம் தயாரித்தல், விற்பனை செய்வது குறித்து தெரியவந்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண்ணிற்கு (9498100690) தகவல் தெரிவிக்கவும்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details