தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாமியார் வீட்டில் துப்பாக்கி வைக்க வந்த மருமகன்!

பெரம்பலூர்: மாமியார் வீட்டில் துப்பாக்கி வைக்க வந்த மருமகன் தகராறில் ஈடுபட்டு துப்பாக்கியை போட்டு விட்டு ஓடிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Police who confiscated country gun in Perambalur
Police who confiscated country gun in Perambalur

By

Published : Aug 8, 2020, 7:48 PM IST

சேலம் மாவட்டம், கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகன் கண்ணன். இவர், பெரம்பலூர் அருகே உள்ள பேரளி கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், கண்ணன் தான் கொண்டுவந்த நாட்டு துப்பாக்கியை மாமியார் வீட்டில் வைக்க வந்துள்ளார்.

அப்போது இங்கே வைக்கக்கூடாது என்று அவரது மாமியார் சண்டை போட்டுள்ளார். தகராறில் ஈடுபட்ட கண்ணன் அந்த துப்பாக்கி அங்கேயே போட்டுவிட்டு ஓடியுள்ளார். இதுகுறித்து கண்ணனின் மாமனார் மருவத்தூர் காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் துப்பாக்கியை கைப்பற்றி, கண்ணன் எதற்காக துப்பாக்கி கொண்டு வந்தார், அவருக்கு எங்கே கிடைத்தது, இந்த துப்பாக்கிக்கு உரிமம் உள்ளதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details