பெரம்பலூர்: கோனேரிபாளையம் கிராமத்திலுள்ள பிசிஏ விளையாட்டு மைதானத்தில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி தொடங்கி வைத்தார்.
டாஸ் போட்டு தொடங்கி வைத்த எஸ்பி பின்னர், இளைஞர்கள் இடையே சிறப்புரையாற்றிய காவல் கண்காணிப்பாளர், இளைஞர்கள் அனைவரும் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் விளையாட்டில் அனைவரும் சிறந்தது விளங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
கிரிக்கெட் வீரர்களுடன் காவல் கண்காணிப்பாளர் கிரிக்கெட் விளையாடிய காவல் கண்காணிப்பாளர்
மேலும், காவல் துறையினருக்கும், இளைஞர்களுக்கும் இடையே ஓர் நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி, இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடினர்.
கிரிக்கெட் விளையாடிய எஸ்பி விளையாட்டிற்கு வயது ஒரு தடையில்லை ஆர்வமும், திறமையும் இருந்தால் போதுமானது என்பதை இளைஞர்கள் மத்தியில் நிரூபித்துக் காட்டினார்.
கிரிக்கெட் விளையாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இளைஞர்களுடன் காவல் கண்காணிப்பாளர் கிரிக்கெட் விளையாடியது, அவர்களுக்கு பெரும் உற்சாகமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தேசிய கைத்தறி நாள்: விற்பனையை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்