பெரம்பலூர்-அரியலூர் சாலை பேரளி என்ற இடத்தில், பெரம்பலூர் அருகே உள்ள குளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரும், அவரது அக்கா மீனாட்சி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபொழுது, மாடு சாலையை கடக்க வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்பி தடுமாறிக் கீழே விழுந்துள்ளனர்.
இந்த விபத்தில் மீனாட்சி தலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்தார். இந்நிலையில் அந்த வழியாக வந்த அரியலூர் மாவட்டம் காவல்துறை தனிப்பிரிவில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் ரவி, காவலர் ராஜசேகர் ஆகிய இருவரும் தாங்கள் வந்த காவல்துறை வாகனத்தில் பலத்த காயமடைந்த மீனாட்சியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.