பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பாலக்கரை பகுதியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையின் ஒத்திகை நிகழ்வு மாவட்ட காவல் துறை சார்பில் நடைபெற்றது.
இதில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களைத் தடுப்பதற்காக பேரிகார்டு அமைத்து கலவர தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காவல் துறையின் அணிவகுப்பு நடைபெற்றது. பாலக்கரை பகுதியில் தொடங்கி அணிவகுப்பு புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.