தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை திருட்டு: குற்றவாளிகளுக்கு வலை! - குற்றச் செய்திகள்

பெரம்பலூர்: குன்னம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற கும்பலை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Police investigation about jewels theft in Perambalur
Police investigation about jewels theft in Perambalur

By

Published : Apr 27, 2021, 4:57 PM IST

பெரம்பலூர் குன்னம் அருகேவுள்ள ஜமாலியா தெருவைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். தற்போது ஊருக்குத் திரும்பியுள்ள நிலையில், தனது குடும்பத்தாருடன் நேற்று (ஏப்.26) காலை மருத்துவ பரிசோதனைக்காக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர்.

பின்னர், இரவு 11 மணியளவில் வீடு திரும்பிய அவர், வீட்டின் முன்பக்க கதவு உடைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 40 சவரன் நகைகள் மாயமானது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மங்கள மேடு காவல் துறையினர், திருட்டு நடந்த வீட்டை சோதனை செய்தனர். அப்போது, திருடர்கள் சமையல் அறையிலுள்ள ஜன்னல் கம்பியை அறுத்து உடைத்து, அதன் வழியே வீட்டினுள்ளே வந்தது கண்டறியப்பட்டது.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அடையாளம் தெரியாத கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details