தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

30 ரூபாய் திருடனை பிடிக்க மோப்ப நாயுடன் விரைந்த போலீசார் - 30 rupee thief in Perambalur

பெரம்பலூர்: திருட வந்த நபர் கடையின் பூட்டை உடைத்து 30 ரூபாயை திருடிச் சென்ற சம்பவத்திற்காக காவல்துறையினர் மோப்ப நாய், கைரேகை நிபுணர்களோடு வந்து விசாரணை மேற்கொண்டது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

30 ரூபாய் திருடனை பிடிக்க மோப்ப நாயுடன் விரைந்த போலீசார்
30 ரூபாய் திருடனை பிடிக்க மோப்ப நாயுடன் விரைந்த போலீசார்

By

Published : May 30, 2020, 8:14 PM IST

பெரம்பலூர் மாவட்டம் பாலக்கரை பகுதியில், பிரபாகரன் என்பவர் SPT ஸ்டோர்ஸ் என்ற கடை வைத்துள்ளார். வழக்கம்போல் இன்று காலையில் கடையை திறக்க வந்த பிரபாகரன், கடையின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, அவர் கடையின் வேறு ஒரு இடத்தில் மறைத்து வைத்திருந்த ரூ. 40 ஆயிரம் திருடப்படாமல் பத்திரமாக இருந்தது. ஆனால் திருடவந்த நபர் கல்லாப்பட்டியில் வைத்திருந்த 30 ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருட்டு சம்பவம் குறித்து தகவலறிந்து மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பெரிய தொகையான ரூ. 40 ஆயிரத்தை விட்டுவிட்டு வெறும் 30 ரூபாயை திருடன் திருடிச் சென்றதற்காக காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களோடு வந்து விசாரணை மேற்கொண்டது அப்பகுதி மக்களிடையே நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;

கை குழந்தையுடன் பசியில் போராடிய பெண்ணுக்கு உதவிய இளைஞர்கள்!

ABOUT THE AUTHOR

...view details