தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் பெண்ணின் தங்க சங்கிலி பறிப்பு: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..

Chain snatch CCTV: சாலையில் நின்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை இரு சக்கரத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
வீட்டின் முன் பேசிக்கொண்டிருந்த பெண்ணின் தங்க சங்கிலி பறிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 5:37 PM IST

வீட்டின் முன் பேசிக்கொண்டிருந்த பெண்ணின் தங்க சங்கிலி பறிப்பு

பெரம்பலூர்:தீரன் நகர்ப் பகுதியில் பெண் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீரன் நகர் உள்ளது. இந்த பகுதியில் நமச்சிவாயம் என்பவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது மனைவி நளினி (50). இவர் இன்று (ஜன.8) காலை சாலையோரம் நின்று தனது வீட்டின் எதிரே உள்ள விஜயதாரணி என்பவரிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

இதையும் படிங்க: சேர்ந்த 10 மாதத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான மாணவி.. குமரியில் உடற்கல்வி ஆசிரியர் கைது!

இதனை அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்கள் இருவர் நோட்டமிட்டுள்ளனர். பின் யாரும் எதிர்பாராத வண்ணம் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த வாலிபர்கள் திடீரென நளினியின் அருகே சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கத் தாலி சங்கிலியைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த நளினி நகையைப் பறித்த நபர்களைத் துரத்தியுள்ளார். ஆனால், அவர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றதால் விரைந்து தப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, நளினி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றினர்.

அதனை ஆய்வு செய்த போலீசார் தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பகல் பொழுதில் நடந்த இந்த நகை பறிப்பு சம்பவம் தீரன் நகர்ப் பகுதி குடியிருப்பு வாசிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தாம்பரம் அருகே வெள்ளம் சூழ்ந்த வீடுகளை நோட்டமிட்டு 60 சவரன் நகை: கொள்ளையர்கள் சிக்கிது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details