பெரம்பலூர்: புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை மற்றும் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் நீர்த்தேக்க தொட்டி பின்புறம் உள்ள ராசப்ப கவுண்டர் மகள் அமிர்தம் என்பவருக்கு சொந்தமான வயல் நிலத்தில், உடல் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது.
இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் நகர போலீசார் சோதனை செய்து விசாரணை செய்தலில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் நபரின் சடலம் கால் பகுதியை தவிர உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.