குற்ற வழக்குகளில் விசாரணை செய்யும் திறனை காவல் அலுவலர்கள் இடையே ஊக்கப்படுத்துவதற்காக, 2018ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புலனாய்வு செய்யும் காவலர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில், 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த புலனாய்வு அலுவலர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 121 காவல் அலுவலர்களுக்கு சிறந்த புலனாய்வுக்கான விருதை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சிறந்த புலனாய்வுக்கான விருது பெற்ற அரும்பாவூர் காவல் ஆய்வாளர் - பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
பெரம்பலூர்: குற்ற வழக்குகளை சிறப்பாக புலனாய்வு செய்ததற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பெண் காவல் ஆய்வாளர்கள் உள்பட ஆறு பேருக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது.
இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பெண் காவல் ஆய்வாளர்கள் உள்பட ஆறு பேருக்கு சிறந்த புலனாய்வுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது அறிவிக்கப்பட்டவர்களில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் காவல் ஆய்வாளர் எ. கலா என்பவரும் ஒருவர். 2017ஆம் ஆண்டு காவல் ஆய்வாளராக அரும்பாவூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். தற்போது ஒரு மாதத்திற்கு முன்பு மங்களமேடு காவல் ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு பணி புரிந்து வருகிறார்.
மேலும், விருது பெற்ற ஆறு காவல் ஆய்வாளர்களுக்கும் உயர் அலுவலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.