கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த ஊரடங்கு காரணமாக தன்னார்லவர்கள், தொண்டு நிறுவனங்கள், பல்வேறு அமைப்பினர் நலத்திட்ட உதவிகளை அடித்தட்டு மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர் உயர் அலுவலர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருள்களான அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருள்களை வழங்கி வருகின்றனர்.